அபாரமாக ஆடிய சண்டிமலுக்கு பாராட்டு!

Thursday, October 5th, 2017

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தினேஷ் சண்டிமாலுக்கு அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையில் இருதினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அந்த அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் 9 மணி நேரம் களத்தில் நின்ற நிலையில் அபாரமாக விளையாடி 155 ஓட்டங்கள் குவித்தார்.

இதுகுறித்து இலங்கை அணி மேலாளர் அசங்கா குருசின்ஹா கூறுகையில், சண்டிமாலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.களத்தில் நிலைத்து நின்றது மட்டுமில்லாமல், மற்ற சில வீரர்களுடன் அவரின் பாட்னர்ஷிப் அபாரமாக இருந்தது.அணியை முன்னின்று வழிநடத்தியது மட்டுமின்றி, தலைவருக்கான பொறுப்பையும் சண்டிமால் பிரமாதமாக மேற்கொண்டதாக கூறியுள்ளார்.அதே போல குறித்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நீரோஷ் டிக்வெல்ல மற்றும் ரங்கன ஹேரத்தையும் அசங்கா பாராட்டியுள்ளார்.

Related posts: