அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் நேரடியாக கண்டுகளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Wednesday, March 24th, 2021

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தொடக்கம் இனிவரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் நேரடியாக கண்டுகளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

போட்டிகள் இடம்பெறும் விளையாட்டரங்குகளில் 40 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: