அனைத்தும் ரொனால்டோவுக்காகவே – போர்த்துக்கல் வீரர் பெபே!

Wednesday, July 13th, 2016

யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது எல்லாம் காயமடைந்து வெளியேறிய ரொனால்டோவுக்காக தான் என்று அந்த அணியின் அனுபவ வீரரான பெபே தெரிவித்துள்ளார்.

யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலே போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேனார். இதனால் அந்த அணி வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் ஈடர் போட்ட கோலால் போர்த்துக்கல் அணி வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றி குறித்து போர்த்துக்கல் அணியின் வீரர் பெபே கூறுகையில், முக்கியமான போட்டியில் சிறந்த ஒரு வீரரை இழப்பது என்பது மோசமான ஒன்று. ரொனால்டோ எந்த நேரத்திலும் அணிக்காக கோல் அடிக்கும் திறமை படைத்தவர். ஆனால் கடவுள் எங்களுக்கு கைகொடுத்தார். அவருக்காக அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டோம்.

இந்த வெற்றியின் மூலம் போர்த்துக்கல் கால்பந்து வரலாற்று புத்தகத்தில் ஒரு சரித்திர பக்கத்தை எழுதி விட்டோம். யாராலும் இந்த வெற்றியை எளிதில் மறந்து விடமுடியாது என்று பெருமையாக கூறியுள்ளார்.

Related posts: