அனில் கும்ப்ளே வெளிற்றம் இந்திய அணியில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது – சஞ்சய் பாங்கர்
Monday, June 26th, 2017பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பதவி விலகியது இந்திய அணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கும்ப்ளே பதவி விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்த சம்பவத்திலிருந்து வீரர்கள் மீண்டு வந்துவிட்டாலும், கும்ப்ளே பதவி விலகல் இந்திய அணியில் நிச்சயமாக ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், எந்த ஒரு அமைப்பிலும், இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வது உண்டு. அந்த மாற்றங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.மொத்தமாக 700 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் பெற்ற டோனி, யுவராஜ் சிங் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் வீரர்களை வழிநடத்துவதாகவும் பாங்கர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|