அநாகரிகமான வார்த்தைப் பிரயோகம்: எச்சரிக்கப்பட்டார் ஸ்டோக்ஸ்!

Thursday, August 31st, 2017

மேற்கிந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளன்று , இங்கிலாந்தின் பன்முக வீரர் ஸ்டோக்ஸ் முறைகேடான வார்த்தைகளைப் பிரயோகித்தார் என்று அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ஹோப் , இவர்வீசிய ஒரு பந்தை எதிர்கொண்டு ஒரு பௌண்டரி அடித்த சமயம் , ஸ்டோக்ஸ் உபயோகித்த அநாகரிகமான வார்த்தைப் பிரயோகம் , இவருக்கு ஒரு புள்ளியைக் கொடுத்துள்ளது . கிரிக்கெட் விதிகளின்படி , களத்தில் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்ளுபவர்கள் , புள்ளிகள் அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்டு வருகின்றார்கள் . ஸ்டோக்ஸ் இன்னொரு புள்ளி எடுத்தால், விளையாடுவதிலிருந்து , இடைக்கால தடை அவருக்கு தண்டனையாக அளிக்கப்படும் அபாயம் இருக்கின்றது . தன் குற்றத்தை பந்து வீச்சாளர் ஒப்புக்கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

Related posts: