அதிஸ்டவசமாக சதம் பெற்ற டேவிட் வார்னர்!

Thursday, December 28th, 2017

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஏஷஷ் தொடரின் நான்காவது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பா sகஎய்யற்பட்டாலும், இரண்டாம் நாளில் வேகமாக விக்கட்டுக்களை இழந்த நிலையில் துடுப்பாடி வருகின்றது.

அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் தனது சதத்தை பூர்த்திசெய்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார், டேவிட் வோர்னர்  பெற்றுக்கொண்ட சதம் அதிர்ஷடவசமாக பெறப்பட்டுள்ளமை அனைவரிடத்திலும் அதிகமாக பேசப்பட்டுவருகின்றது.

வோர்னர் தான் 99 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இங்கிலாந்தின் அறிமுக வீரர் டொம் கரனின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். எனினும் சற்றுநேரத்தில் பந்து வீச்சை பரிசீலனை செய்த போது, கரன் வீசியது முறையற்ற பந்தென அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மைதானத்தின் எல்லைவரை சென்ற டேவிட் வோர்னர் மீண்டும் வந்து தனது சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

Related posts: