அதிர்ச்சி கொடுத்த துருக்கி வீரர்!

Saturday, August 12th, 2017

இலண்டனில் நடைபெற்றுவரும் உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் அனைவரதும் எதிர்பார்ப்பை முறியடித்து துருக்கி வீரர் றமில் குலியேவ் தங்கம் வென்றுள்ளார்.

400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தென்னாபிரிக்க வீரர் வான் நெய்கெர்க், இப்பந்தயத்திலும் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் முறியடித்து துருக்கி வீரர் அதிர்ச்சி வெற்றியை பதிவு செய்துள்ளார்.

27 வயதுடைய றமில் குலியேவ், உலகளாவிய ரீதியிலான போட்டியொன்றில் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். குலியெவ் பந்தய தூரத்தை 20.09 விநாடிகளில் கடந்து பதக்கத்தை தனதாக்கினார்.

இந்நிலையில் தனது வெற்றி குறித்து தெரிவித்த குலியெவ், ”எனது கனவு நனவாகியுள்ளது. இன்றைய தினம் எனது விளையாட்டுத்துறை வாழ்வில் மறக்க முடியாத சிறப்பான நாளாகும். எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியே” என்றார்.

Related posts: