அதிரடி வீரர் இருந்து தோல்வியுற்ற மேற்கிந்திய தீவுகள்!

Friday, December 29th, 2017

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளைக்கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி நிறைவிற்கு வந்துள்ளது.

  நியூஸிலாந்தின் நெல்சன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நியூஸிலாந்து அணி, 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக மூத்த அனுபவ வீரர்களான சுனில் நரேன், கிரன் பொலாட் ஆகியோர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக விலகிய நிலையில், மார்லன் சாமுவேல் காயம் காரணமாகவும், சமி மற்றும் பிராவோ ஆகியோர் மேற்கிந்திய கிரிக்கட் வாரியத்துடனான முரண்பாடு காரணமாகவும், இந்த போட்டியில் பங்குகொள்ளவில்லை, அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் பங்கு கொண்டிருந்தார், இதேவேளை நியூஸிலாந்து அணி சார்பாக சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது, குறிப்பாக அணித்தலைவரான ஹேன் வில்லியம்சன் ரென்ட் போல்ட் ஆகியோர் முதல் இரு ரீ20 போட்டிகளில் பங்குகொள்ள மாட்டார்கள். இதனடிப்படையில் நியூஸிலாந்து அணியை ரிம் சவ்தி வழிநடாத்தினார்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் கிரைக் பரத்வைட் பந்துவீச்சை தெரிவு செய்தார், இதனடிப்படையில் கழமிறாங்கிய கொலின் முன்றோ குப்டில் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தை புரியவில்லை,ஆயினும் நியூஸிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக முன்றோ 53 ஓட்டங்களையும், க்ளென் ஃபிலிப்ஸ்55 ஓட்டங்களையும், ரெயிலர் சன்டர் ஆகியோர் தலா 20,23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர், மேற்கிந்திய தீவுகளின் வில்லியம்ஸின் கடைசி ஓவரில் மட்டும் 26 ஓட்டங்கள் பெறப்பட்டமை விசேட அம்சமாகும். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் ரெயிலர் மற்றும் பரத்வைட் தலா இரு விக்கட்டுகளைக் கைப்பற்றினார்கள். இருபது ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து அணி 7 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

188 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் சோபிக்கத்தவறியமையாலும், குறித்த இடைவேளைகளில் விகட்டுக்கள் சரிக்கப்பட்டதாலும் 19வது ஓவர் நிறைவில் 140ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது, அணி சார்பாக பினெக்சர் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, பரத்வைட், ரெயிலர், நேர்ஸ் ஆகியோர் தலா 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரான்ஸ் மற்றும் சவ்தி ஆகியோர் தலா 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்கள்., ஆட்ட நாயகனாக தக்க தருணத்தில் நிலைத்து நின்று அரைச்சதம் கடந்த க்ளென் ஃபிலிப்ஸ் தெரிவானார்.

மீதமாக இரு போட்டிகள் இருக்கின்ற நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இரு அணிகளுக்குமிடையான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி வருகின்ற முதலாம் திகதி திங்கட்கிழமை மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts: