அதிரடியில் அடங்காத மெக்கல்லம்!

Saturday, January 7th, 2017

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிராண்டன் மெக்கல்லம் அதிரடி காட்டி தனது பேட்டை இரண்டாக உடைத்தார்.

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் – பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் குவித்தது. இதனையடுத்து 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு பியர்சன், மெக்கல்லம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

இந்நிலையில் வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடந்தார் மெக்கல்லம். அப்போது 13வது ஓவரை டை வீசினார்.அந்த ஓவரின் 3வது பந்தை சிக்சர் விளாசிய மெக்கல்லம், அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்க நினைத்தார். ஆனால் அவரது பேட் இரண்டாக உடைந்தது. இதை ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 14.4 ஓவரிலேயே 174 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெக்கல்லம்( 50), லைன் (98) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Untitled-1 copy

Related posts: