அதிரடிகாட்டி அதிர வைத்த கெயில்!

Friday, April 20th, 2018

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் இலெவன் பஞ்சாப், 20 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது

க்றிஸ் கெயில் ஆட்டமிழக்காமல் 11 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 63 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலளித்து துடுப்பாடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுதோல்வி கண்டது.

ஆட்டநாயகனாக க்றிஸ் கெயில் தெரிவானார்.

அதேநேரம், ஐ.பி.எல். தொடரில் இதுவரையில் 6 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகளுடன், ஓட்டவிகித அடிப்படையில் 2ம் இடத்தில் உள்ளது.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் நேற்றைய வெற்றியுடன் மொத்தமாக 6 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெற்று 4ம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் இறுதி 3 இடங்களில் உள்ளன.

Related posts: