அதிசிறந்த வீரருக்கான விருதை வென்றார் நோவக் ஜோகோவிச்!

உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் (Laureus) விருதை சுவீகரித்தார்.
விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளில் அதிசிறந்தவர்களைத் தெரிவு செய்து கௌரவிக்கும் லொரியஸ் வருடாந்த விருது வழங்கல் விழா மொனாக்கோவில் நடைபெற்றது.
ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தட்டிச்சென்றார்.
அவர் கடந்த வருடம் விம்பிள்டன், அமெரிக்க பகிரங்கம் மற்றும் இவ்வருடம் அவுஸ்திரேலிய பகிரங்கம் ஆகிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வெற்றிகொண்டார்.
இதேவேளை, அதிசிறந்த வீராங்கனை விருது ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ் வசமானது.
தாற்பரியமிக்க விளையாட்டு வீரர் விருதை அமெரிக்காவின் லின்ட்சே வூனன் வென்றார்.
Related posts:
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து சயிட் அஜ்மல் ஓய்வு?
குமார் சங்ககாரா முதலிடம்!
பந்துவீச்சில் தவறு:அகில தனஞ்சயவுக்கு தடை!
|
|