அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்கத்து வீரரானார் சாஹிப் அல் ஹசன்!

Tuesday, September 27th, 2016

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராக திகழ்ந்து வருபவர் சாஹிப் அல் ஹசன். கடந்த 2006-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

முதல் விக்கெட்டாக ஷபிர் நூரியை எல்.பி.டபிள்யூ. மூலம் வீழ்த்தினார். இதன்மூலம் 206 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த அப்துர் ரஸாக் சாதனையை சமன் செய்தார். அதன்பின் ரஹ்மாத் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் 207 விக்கெட்டுக்கள் வீழ்த்திய சாகிப், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காள தேச வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதுபற்றி சாகிப் கூறுகையில், “அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற செய்தி சிறந்த உணர்வைத் தருகிறது. ஆனால், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும், எனக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அதிகமாக கிடைக்க வில்லை” என்று நகைக்சுவையாக குறிப்பிட்டார்.

 DSCF1788 copy

Related posts: