அதிகம் பேசக்கூடாது :  புரிந்துகொண்டேன் என சொல்கிறார் விராட் கோஹ்லி!

Thursday, May 3rd, 2018

பந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டதாக, பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றி குறித்து பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘பந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

அவர்களிடம் நான் உங்களுக்கு எது வருமோ அதை செய்யுங்கள் என்றேன். உங்கள் விருப்பப்படி பீல்டர்களை நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் விருப்பப்படி திட்டமிடுங்கள், வீரர்களை உங்கள் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு வழிநடத்துங்கள் என்றேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: