அணி தலைவி பதவியில் மாற்றம்!

Wednesday, November 9th, 2016

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவி பதவியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை மகளிர் அணியின் தலைவியாக இடதுகைப் பந்து வீச்சாளர் இனோகா ரனவீர நியமிக்கப்பட்டுள்ளார்..

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 9ம் திகதி கொழும்பு சிங்களம் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இலங்கை அணியின் வழமையான தலைவியான ஷசிகலா சிறிவர்தனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இனோகா ரனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

92c605col151021958_4994376_08112016_aff_cmy

Related posts: