அணி சிறப்பாக விளையாடியது – பிராத்வெய்ட்!

Wednesday, July 12th, 2017

தமது அணியின் வீரர்கள் சிறப்பான திறமைகளை வெளிக்காட்டி இந்திய அணியை தோற்கடித்தனர் என மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் பிராத்வெய்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஒரே ஒரு ரி – ருவன்ரி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் குறித்த வெற்றி தொடர்பில்இ சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்இ “ தங்கள் அணி வீரர்கள் களத்தில் செயல்பட்ட விதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது இரசிகர்களின் முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும் என்று விரும்பி செயல்பட்டு இந்திய அணியை வெற்றி கண்டோம்.

எவின் லீவிஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை அதிகம் பெற்றுக் கொடுத்தார். அதேபோல் கேஸ்ரிக் வில்லியம்சும் அபாரமாக விளையாடியிருந்தார்.அவர் 6ஆவது ஓவரில் விராட்கோலி விக்கெட்டை வீழ்த்தியதுடன்இ அதே ஓவரில் ஷிகர் தவானை ஆட்டமிழப்பு செய்தது திருப்புமுனையாக அமைந்தது.

இந்திய அணியை நாங்கள் வெற்றி கொள்வதற்கு அந்த அணி 20 ஓட்டங்களை குறைவாக பெற்றுக் கொண்டமையே காரணம் என நான் நினைக்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.

Related posts: