அணியை பலப்படுத்த சங்கா,மஹேலவுக்கு அழைப்பு!
Saturday, September 30th, 2017
இலங்கை அணியின் சிறப்பு ஆலோசனை குழுவில் இடம்பெற சங்ககாரா மற்றும் ஜெயவர்தனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் சங்ககாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக மோசமாக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடர்பாக சமீபத்தில் ஆலோசனை நடந்தது.இதன் அறிக்கை இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதை தொடர்ந்து அணியை சீர்படுத்த சிறப்பு ஆலோசனை குழுவை உருவாக்க ஜெயசேகரா முடிவெடுத்தார்.இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் முன்னாள் தலைவர் ஹேமகா அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.குழுவில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் சங்ககாரா மற்றும் ஜெயவர்தனேவை சேரும்படி தயாசிறி அழைப்பு விடுத்துள்ளார்.இதற்கு சங்ககாரா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
|
|