அணியை தெரிவுசெய்யும் உரிமையைப் பெற்ற ஹதுருசிங்க!

Wednesday, January 10th, 2018

இலங்கை அணிக்குழாமை தெரிவுசெய்யும் உரிமை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு மாத்திரமே வழங்கியிருந்தது. இதில் பயிற்றுவிப்பாளர் தலையிட முடியாத சூழ்நிலை தொடர்ந்து வந்தது. எனினும் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள, சந்திக ஹதுருசிங்கவுக்கு, அதிக பலத்தை வழங்கும் நோக்கில் கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தெரிவுக்குழு தொடருக்கான வீரர்களை அறிவிக்கும் பட்சத்தில், அதிலிருந்து விளையாடும் பதினொருவரை தீர்மானிக்கும் பொறுப்பு தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க, முகாமையாளர் அசாங்க குருசிங்க மற்றும் அணித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவரை கிரிக்கெட் சபை நாளை அறிவிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: