அணியில் இருந்து தவான் நீக்கம்!

Friday, November 29th, 2019

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிக்ஹர் தவான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷிகர் தவான் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வெற்றிடத்துக்கு பதிலாக விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான சஞ்சு சம்சனுக்கு இந்திய குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 3 சர்வதேச இருபதுக்கு ௲ 20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ள நிலையில், முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: