அணியின் பெரிய சொத்து இவர் – ரோகித் சர்மா!

Thursday, March 29th, 2018

நியூஸிலாந்து அணியின் மிச்சல் மெக்லானகன் ஐபிஎல் மும்பை அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார் என தான் நம்புவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 7-ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இது குறித்து பேசிய மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா, ஐ.பி.எல் ஏலத்தின் போது மெக்லானகனை அணியில் எடுக்காதது எங்களது துரதிஷ்டம். ஆனால் சரியான நேரத்தில் அவர் அணிக்கு திரும்பியுள்ளமை அணியை பலப்படுத்தியுள்ளது.

இந்தாண்டு மும்பை அணியின் மிகப்பெரிய சொத்தாக அவர் இருப்பார் என நான் நம்புகிறேன்

கடந்த சீசன்களில் அவர் அணிக்கு எத்தகைய பங்களிப்பை வழங்கினாரோ, அதே பங்களிப்பை இந்தாண்டும் வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

Related posts: