அணியின் நிலை கவலை தருகின்றது – ஜெயவர்தன !

Thursday, June 6th, 2019


இலங்கை அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரர்கள் கவலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் எதிராக இலங்கை அணி வெற்றிப்பெற்றாலும், இலங்கை அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்டகாரர்கள் மளமளவென சரிந்தனர்.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஜெயவர்தன கூறியதாவது, இலங்கை அணியின் மீண்டும் நடுத்தர வரிசை சரிவை தவிர்க்க வேண்டும் என்றால் இலங்கை துடுப்பாட்டகாரர்கள் தங்களை சிறப்பாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

நடுத்தர வரிசையில் இலங்கை மளமளவென விக்கெட் இழந்ததது கவலையளிக்கிறது. பலர் மிக எளிதாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இலங்கை சிறப்பாக துடுப்பாடி இருக்க வேண்டும் என்பதில் கேள்வியே இல்லை, இலங்கை அணி 250-க்கும் கூடுதலான ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும் என மஹேல ஜெவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts: