அணியின் துடுப்பாட்டம் குறித்து அதிர்ப்தி தெரிவித்துள்ள – ஹசான்!
Monday, August 14th, 2017
இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி கொள்ள முடியாது என அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹசான் திலகட்ண குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை அணியின் வீரர்கள் தெரிவு சிறப்பாகவே இருக்கின்றது.எனினும் துடுப்பாட்ட வீரர்களின் தன்னம்பிக்கை குறைவாகவே காணப்படுகின்றது
எனினும் எதிர்வரும் காலங்களில் அவற்றை சரிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் ஹசான் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடைலான மூன்றாவதும் இறுதியுமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
இந்த நிலையில், போலோ – வோன் அடிப்படையில் தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவின் போது ஒரு விக்கட்டை இழந்து 19 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|