அணித் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் !

Monday, April 24th, 2017

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இடம்பெறவுள்ள செம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாமின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவராக உப்புல் தரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அஞ்சலோ மத்தியூஸ், உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ், சாமர கப்புகெதர, அசேல குணரட்ன, டினேஷ் சந்திமால், லசித் மலிங்க, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், நுவான் குலசேகர, திஸர பெரேரா, லக்‌ஷன் சந்தகான், சீக்குகே பிரசன்ன. இவர்களுக்கு மேலதிகமாக, இத்தொடரில் டில்ருவான் பெரேரா, தனுஷ்க குணதிலக ஆகியோர், மேலதிக வீரர்களாகச் செயற்படுவர்

Related posts: