அணித்தலைவராக ரோஹித் !

Thursday, March 23rd, 2017

தியோதர் டிராபி தொடருக்கான இந்தியா ‘புளூ’ அணி அணித்தலைவராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியானது எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இருந்து டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுரேஷ் ரெய்னாவும் பார்த்தீவ் படேல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இனைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில், தொடைப்பகுதி ஏற்பட்ட காயத்திற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட சர்மா 4 மாதம் ஓய்வில் இருந்தார்.

பின்னர், விஜய் ஹசாரே டிராபியில் மும்பை சார்பில் விளையாடி இருந்தாலும் குறைந்த ஓட்டங்களை எடுத்து ஏமாற்றினார். ஆனால், தியோதர் டிராபியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் இதில் இடம்பிடித்துள்ளனர்

Related posts: