அடுத்த போட்டியிலும் அடிப்போம் – வங்கதேச தலைவர்!

Friday, September 1st, 2017

வங்கதேசத்தில் அவுஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் வரலாற்றில் சாதனை வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம்.

இந்த வெற்றிக்கு பின்னர் வங்கதேச அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பெருமகிழ்ச்சியாக உள்ளது.ஷாகிப் மற்றும் தமிம் தனித்துவமான வீரர்கள். ஆட்டத்தை சீரான முறையில் ஆடி வருகிறோம். சுழற்பந்துவீச்சாளர்கள் தைஜுல், ஷாகிப் அபாரமாக வீசினர்.முதல் இன்னிங்ஸில் தமிம் இக்பால், ஷாகிப் ஹசன் கூட்டணி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. பீல்டிங் மற்றும் பல இடங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை.அடுத்த போட்டியில் இன்னும் சவாலாக, கடினமாக ஆடி தொடரை வெல்வோம் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

Related posts: