அடுத்த ஐ.பி.எல் தொடரில் அணிக்கு 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி!

Friday, December 8th, 2017

அடுத்த ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடை முடிவடைந்து அடுத்த வருடம் இரண்டு அணிகளும் மீண்டும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அணிகளின் சம பலத்தை கருத்திற் கொண்டு ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களைத் தக்க வைக்கும் என்பதில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவின.

சில அணிகளின் உரிமையாளர்கள் அணிக்கு மூன்று பேரை தக்க வைக்க வேண்டும் என்றும் வேறு சில அணிகளின் உரிமையாளர்கள் அணிக்கு 5 பேரை தக்க வைக்கவேண்டும் என்றும் வாதிட்டனர். அணிக்கு 5 வீரர்களைத் தக்க வைக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Related posts: