அடுத்த உலகக் கிண்ணத் தொடர் வரை மெத்தியூஸே அணித் தலைவர்!

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண போட்டிக்கு தலைமை தாங்குவார் எனவும், தனது பொறுப்பினை புரிந்துக்கொண்டு மெத்தியூஸ் செயற்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதெனவும் இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் தலைமை பொறுப்பிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் ஒருபோதும் கலந்துரையாடவில்லையென இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்
இதேவேளை அணி தலைமைத்துவம் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய காலம் இதுவல்ல, தற்போது தென்னாபிரிக்காவுடனான தொடர் இடம்பெற்று வருகின்றது, அதற்கு அனைவரும் மெத்தியூஸிற்கு ஆதரவளிக்க வேண்டும் என அணி தேர்வுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் சிறந்த இளம் பந்து வீச்சாளர்கள் ,துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் காணப்படும் நிலையில் அவர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி எந்த எந்த நேரங்களில் அணியை வெல்ல வைக்க வேண்டும் என அதன் படி ஆட வேண்டும்.நாங்கள் நல்ல அணியை தேர்வு செய்ய முடியும் அவர்கள் ஆடவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
இலங்கையில் தான் அதிகம் கிரிக்கெட் விளையாடும் இடமாகவுள்ளது.தங்களது பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும்.வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் செயற்பட்டனர்.ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் தான் சரியான முறையில் தங்களது பங்களிப்கை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
20க்கு 20 போட்டி மற்றும் ஒரு நாள் ஆட்டம் தொடர்பாக நாங்கள் இங்குகிருந்து கலந்துரையாடலை செய்தோம் அதன் பிரகாரம் அவர்கள் ஆடுவார்கள் என நம்புகிறோம்.அணித்தலைவரை மாற்றவெண்டும் என நாங்கள் எங்களது கலந்துரையாடலில் பேசவில்லை.2019ம் ஆண்டு உலக்கிண்ணம் வரை தற்போதைய அணித்தலைவர் தான் அணியை வழி நடத்துவார் என இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டியை இலங்கை நடத்த எண்ணியுள்ளோம்.அதற்கான முடிவு எதிர்வரும் பெப்ரவரி 3ம் 4ம் திகதி துபாயில் இடம்பெறும் ஐ.சி.சி கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என தெரிவித்தார்.
இந்த போட்டியை நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்ற போது இந்தியப் பிரதமர் மோடியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான நிதியை அரசு பொறுப்பேற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே போல் இந்தியாவும் தனது 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையுடன் கிரிகெட் பேட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.அதனை நாங்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளோம்.
அதன் முடிவு அடுத்தமாதம் தெரியும் என்றும் கூறினார்.இலங்கை கிரிகெட் 2016 ம் ஆண்டு பல்வெறு நெருக்கடி மற்றும் வெற்றி,தோல்வி, சவால்களை வெற்றிகரமாக முன்னோக்கி சென்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் அடுத்த 4 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச விளையாட்டு அரங்கை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளோம் அதனை திட்டமிட்டு முடிக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்
அதற்காக 100மில்லியன் ரூபா நிதியை செலவிடவுள்ளோம். ஹம்பாந்தேட்டை- சூரியவெவ மைதானம் அமைந்திருக்கும் இடம் கிரிக்கெட் நடைபெற பொருத்தமான இடமில்லை அதனை நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் வீரர்கள் ஹம்பாந்தோட்டையில் வீரர்கள் தங்குவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்து அதன் ஊடாக அந்த மைதானத்தை பயன்படுத்தவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.கிரிக்கெட் நிறுவனம் தயாரித்த திட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்த வரலாறு இல்லை திட்டம் செயற்படுத்த முறையான நடைமுறை தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
|
|