அடி மேல் அடிவாங்கும் அவுஸ்திரேலியா அணி

Tuesday, June 6th, 2017

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியான அவுஸ்திரேலியா- வங்கதேசம் போட்டி மழையால் சமநிலையில் முடிவற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்து நாட்டில்க் கடந்த 1-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை நடக்கிறது. இத்தொடரில் அவுஸ்திரேலியா – வங்கதேசம் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 44.3 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டாகி சொதப்பியது.அந்த அணியின் துவக்க வீரர் தமிம் இக்பால் மட்டும் 95 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.183-ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடியது.

ஆரம்ப வீரர் பின்ச் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின், வந்த தலைவர் ஸ்மித் வார்னருடன் இணைந்து பொறுமையாக விளையாடி வந்தார்.16 ஓவர்களில் 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில், திடீரென அடைமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும், அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான இலக்கு 43 ஓவர்களில் 89 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.

ஆனால், இரு வீரர்களும் களமிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன் மீண்டும் மழை பிடித்துக்கொண்டது.இன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால், போட்டிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில், மழை வந்து முடிவுக்கு வேட்டு வைத்தது.

குறிப்பாக, இன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால், போட்டிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஏற்கெனவே, அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டிக்கு மழையால் முடிவில்லாமல் போனது. இந்த போட்டிக்கும் முடிவு இல்லை என்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு மழையால் அடி மேல் அடி விழுந்துள்ளது.

Related posts: