அடி பணிந்தது பங்களாதேஷ்!

Tuesday, October 25th, 2016

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 22 ஒட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இப் போட்டியின் இறுதி நாளில் 2 விக்கெட்டுகள் வசமிருக்க, 33 ஒட்டங்கள் பெறவேண்டியிருந்த பங்களாதேஷ் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், பென் ஸ்டோக்ஸின் மிரட்டல் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க இறுதி இரு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

சிட்டகாங்கில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக 293 ஒட்டங்களை குவித்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஒட்டமாக, மொயின் அலி 61 ஒட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சு சார்பில் ஹசான் மிரஷ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைதொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 248 ஒட்டங்களை குவித்தது. இதில் அணியின் அதிகபட்ச ஒட்டமாக, தமீன் இக்பால் 78 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சு சார்பில் மொயின் அலி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

45 ஒட்டங்கள் முன்னிலையில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 240 ஒட்டங்களை குவித்தது. இதில் அணியின் அதிகபட்ச ஒட்டமாக, பென் ஸ்டோக்ஸ் 85 ஒட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சில் சகிப் ஹல் ஹசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 285 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பங்களாதேஷ் அணி, நேற்றைய நான்காவது ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 253 ஒட்டங்களை பெற்றிருந்தது. களத்தில் சபீர் ரஹ்மான் 59 ஒட்டங்களுடனும், தஜ்யுல் இஸ்லாம் 11 ஒட்டங்களுடனும் இருந்தனர்.

இந்நிலையில், இறுதி நாளில் 2 விக்கெட்டுகள் வசமிருக்க, 33 ஒட்டங்கள் பெறவேண்டியிருந்தது.இப்போட்டியை பங்களாதேஷ் இலகுவாக வெற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், பென் ஸ்டோக்ஸின் மிரட்டல் பந்து வீச்சு மூலம் போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே பங்களாதேஷ் அணி, இரு விக்கெட்டுகளையும் தாரை வார்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 22 ஒட்டங்களால் த்ரில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில், வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பென் ஸ்டோக்ஸ் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

25col3969

Related posts: