அஞ்சலோ மத்யூஸ் வருகை நிச்சயமற்றது!

Thursday, March 1st, 2018

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு ௲ 20 போட்டிகளுக்கான தலைவர் அஞ்சலோ மத்யூஸ் இற்கு எதிர்வரும் மார்ச் 06ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகிய இன்டர் கிளப் இருபதுக்கு ௲ 20 போட்டியின் போது அஞ்சலோ மத்யூஸ் கோல்ட்ஸ் அணிக்காக விளையாடுவார் என தேர்வுக் குழு எதிர்பார்த்திருந்த நிலையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் மத்யூஸ் விளையாட முடியாது என அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நடைபெறவுள்ள உடற்பயிற்சி சோதனையின் போது மத்யூஸ் குறித்த இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நிரந்தரத் தலைவர் மத்யூஸ் விளையாடாதவிடத்து சுதந்திர கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் தலைமை தினேஷ் சந்திமாலுக்கு வழங்க உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண போட்டியானது எதிர்வரும் 06ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: