அசார் அலி அரட்டைச் சதம்!

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அசார் அலி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இப்போட்டியில் அசார் அலி 93 ஓட்டங்கள் குவித்திருந்த போது, எதிர் திசையில் ஆடிக்கொண்டிருந்த அசாத் அலி, ஸ்ட்ரைட் திசையை நோக்கி அடித்துள்ளார்.
அப்போது அவுஸ்திரேலியா பந்து வீச்சாளரான ஜாக்சன்பேர்ட்ஸ் அந்த பந்தை தடுக்க முயற்சி செய்துள்ளார்.
பந்து அவரது கையில் பட்டு அருகில் இருந்த ஸ்டம்ப்பின் மீது பட்டுள்ளது. அப்போது அசார் அலி கிரீசிற்கு வெளியில் இருந்ததால் அவுஸ்திரேலியா அணியினர் அவுட் கேட்டுள்ளனர். இதனால் களநடுவர் மூன்றாவது நடுவரிடம் கேட்டுள்ளார்.
What a rollercoaster! #AUSvPAK pic.twitter.com/rrW0wyjZzH
— cricket.com.au (@CricketAus) December 27, 2016
அப்போது அசார் அலி கிரீசிற்கு உள்ளே இருந்துள்ளார் . இதனால் அவுட் இல்லை என்று நினைத்த போது, மூன்றாவது நடுவர் அவுட் என்று கொடுத்துவிட்டார். இதனால் ரசிகர்களின் ஆரவாரம் களைகட்டியது.
அதன் பின்னர் தவறுதலாக கொடுத்துவிட்டதாக கூறி, மீண்டும் நாட் அவுட் என்று அவர் அறிவித்த பின்பும் அவுஸ்திரேலியா ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம் செய்துள்ளனர்.
93 ஓட்டங்கள் எடுத்த போது அவுட் என கூறப்பட்ட அசார் அலி அதன் பின்னர் தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தால் இரட்டை சதம் அடித்து 205 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்துள்ளார்.
Related posts:
|
|