அசமந்தப் போக்கே தோல்விக்கு காரணம் – பாக். பயிற்சியாளர் மிக்கி!

இலங்கை அணியிடம் பாகிஸ்தான் அணி தோற்றதற்கு காரணம் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக விளையாடாமையே என பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்துர் தெரிவித்துள்ளார்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
136 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை கூட எட்ட முடியாமல் பாகிஸ்தான் 114 ஓட்டங்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்துர், எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து நின்று சரியாக விளையாடாமல் போனதே தோல்விக்கு காரணம்
இரண்டாவது இன்னிங்சில் ஒரு வீரராவது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். துடுப்பாட்ட வீரர்களின் மோசமான செயல்பாடு குறித்து ஆலோசிப்போம்.
ஆசாத் ஷபிக் சிறந்த வீரர் ஆவார், அவர் சதம் அடித்திருக்க வேண்டும் என தான் நினைத்ததாக மிக்கி மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|