அசத்தப் போகும் திரிமன்னே -அரவிந்த டி சில்வா ஆதரவு!

Thursday, May 5th, 2016
இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, சமீப காலமாகவே தொடர்ந்து தடுமாறி வரும் திரிமன்னேவை முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதற்காக கொழும்பில் இருந்து இலங்கை அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து அரவிந்த டி சில்வா தெரிவிக்கையில் -, சில வீரர்கள் முன்பு நன்றாக செயல்பட்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட கால அவகாசம் வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக சனத் ஜெயசூரியாவை எடுத்துக் கொள்ளலாம். அவர் அணிக்கு வந்த போது தொடர்ந்து சோபிக்காமலேயே இருந்தார். அவரது ஆரம்பகால சாதனை என்பதும் மிக மிகக் குறைவு தான். ஆனால் அதன் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

சில வீரர்களை பொறுத்தவரை நாம் அமைதி காக்கத்தான் வேண்டும். ரசிகர்கள் திரிமன்னேவை விமர்சிப்பது சரியல்ல. நாம் தான் அவர் திறமையான வீரர் என்றும் அப்போது நம்பினோம் என்று கூறியுள்ளார்.

மேலும், இங்கிலாந்து அணியை மிரட்டக் கூடிய பந்துவீச்சு தாக்குதல் இலங்கையிடம் உள்ளது என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: