அசங்க குருசிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் உயர் பதவி!

Wednesday, March 1st, 2017

இலங்கை தேசிய அணியின் புதிய முகாமையாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

1996 ஆண்டு உலகக் கிண்ணத்தினை கைப்பற்றிய இலங்கை அணியில் அசங்கவும் ஓர் வீரராவார். இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதோடு, குறித்த நியமனத்தினை தாம் ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது இலங்கை தேசிய அணியின் முகாமையாளராக ரஞ்சித் ப்ரனாந்து அவர்கள் கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Asanka_Gurusinha

Related posts: