அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறையை மாற்றும் பயிற்சி ஆரம்பம்!

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறையை சரிசெய்வதற்கான பயிற்சி நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
அகில தனஞ்சயவின் பந்து வீச்சு பாணி முறையற்றது என சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்திருந்து. இதன்படி , அவர் சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் பந்து வீச்சு முறையை சரிசெய்யும் வரை அகில தனஞ்சயவிற்கு உள்ளூர் போட்டிகளிலும் விளையாட மூன்று வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முகாமையாளர் அசங்க குருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறையை சரிசெய்யும் இடம் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பிரதான சுழற்பந்து பயிற்றுவிப்பாளர் பியல் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில்
வங்கதேச பயிற்சியாளர் நீக்கம்!
தெற்காசிய விளையாட்டுப் போட்டி- 3வது இடத்தில் இலங்கை!
|
|