அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா போகம்பரையில்!

Thursday, October 6th, 2016
அகில இலங்கை விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் 32ஆவது முறையாகவும் இம்முறை பிரமாண்டமாக நடாத்துவதற்கு கல்வி அமைச்சின் சுகாதார போஷாக்குக் கல்வி மற்றும் விளையாட்டுக் கிளை சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்த போட்டி நிகழ்வுகள் 04 கட்டங்களாக நடாத்தப்படுவதுடன் குழு விளையாட்டுக்கள் 27க்காக 03 கட்டங்களின் கீழ் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடக்கு, கிழக்கு உட்பட சிறப்பாக நடாத்தி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

நான்காவது கட்டங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கண்டி போகம்பர விளையாட்டரங்கில் 2016 ஒக்டோபர் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை 05 நாட்கள் மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள் 2684 மற்றும் வீராங்கனைகள் 2437 ஆக பாடசாலைகள் 1452 போட்டிகளில பங்கு கொள்வார்கள்.

தேசிய மட்டத்தில் 05 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் ஒரே ஒரு விளையாட்டுப் போட்டியாக இந் நிகழ்வு இலங்கை விளையாட்டு வரலாற்றில் இடம்பெறுகின்றது.

2016 ஒக்டோபர் 13ஆம் திகதி இந்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தலைமை தாங்குவதுடன் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாவட்டத்தின் ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளிட்ட ஏனைய அதிதிகளின் பங்கேற்புடன் நடாத்தப்படவுள்ளது.

சென்ற ஆண்டின் அகில இலங்கையின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையான றொஷான் தம்மிக்க மற்றும் ருமேஷிக்கா ரத்நாயக்கா நிகழ்வின் தீப்பந்தமானது மைதானத்தைச் சுற்றி எடுத்துவரப்பட்டதன் பின்னர் ஏற்றி வைக்கப்படவுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்கின்ற சகல விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்குமான மதிய உணவு வழங்க கல்வி அமைச்சரின் விஷேட வேண்டுகோளின் பேரில் இம்முறை கல்வி அமைச்சு ரூபா எண்பது (80) இலட்சத்துக்கு அதிகமான தொகையினை ஏற்பதுடன் கடந்த பல ஆண்டுகளில் இந்த தொகை பணம் ஒதுக்கீடு செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளின் இறுதி நிகழ்வு 2016 ஒக்டோபர் 16ஆம் திகதி பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் மாவட்டத்தின் அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மிக பெருமையுடன் விமரிசையாக நடாத்த சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

123

Related posts: