ஃபிஜி தீவுக்கு முதல் தங்கப்பதக்கம்!

Friday, August 12th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை அதுவும் தங்கப்பதக்கத்தை ஃபிஜி தீவு வென்றுள்ளது.

ஏழு பேர் விளையாடும் ஆண்கள் ரக்பி விளையாட்டில் பிரித்தானியாவை தோற்கடித்து ஃபிஜி அணி பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஃபிஜி வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்று கூறிய ஃபிஜி தீவின் பிரதமர் ஃப்ராங்க் பைனிமராமா, இதை கொண்டாடும் விதமாக மேலும் ஒரு பொது விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Related posts: