Microsoft Edge இணைய உலாவிக்கான புதிய நீட்சி!
Saturday, June 11th, 2016மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்திருந்த இயங்குதளம் தான் விண்டோஸ் 10.
இவ் இயங்குதளத்துடன் தனது புதிய இணைய உலாவியான Microsoft Edge-னையும் அறிமுகம் செய்திருந்தது. இப் புதிய உலாவியானது பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந் நிலையில் இவ் உலாவிக்காக புதிய நீட்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
LastPass எனும் குறித்த நீட்சியானது கடவுச் சொற்களை இலகுவாக பயன்படுத்தி விரைவான செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றது.
அதாவது இறுதியாக லாக்கின் செய்த கணக்குகளின் கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்கக்கூடியதாக இந்த நீட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நீட்சி தற்போது விண்டோஸ் இன்சைடர் புரோகிராமினைக் கொண்ட கணணிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாக இருக்கின்றது.
ஏனைய அனைத்து விண்டோஸ் கணணிகளுக்குமான நீட்சி இவ் வருட இறுதிக்குள் வெளியிடப்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது
Related posts:
|
|