HIV எதிர்ப்பு ஆராய்ச்சிக்கு உதவும் பசுக்கள்!

எய்ட்ஸ் நோய்க்கு காரணமான HIV -ஐ அழிப்பதற்கு விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ் ஆராய்ச்சிக்கு Broadly Neutralising Antibodies (Bnabs) எனப்படும் பிறபொருள் எதிரி அவசியம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Bnabs ஆனது வைரஸின் பல்வேறுபட்ட நிலைகளை அறிய உதவுகின்றது.
HIV ஆராய்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும் Bnabs இனை பசுக்களிலில் இருந்து பெற முடியும் என புதிய ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பசுக்கள் ஒருபோதும் HIV வைரஸ்களை பெற்றுக்கொள்வதில்லை.
இருந்தும் விஞ்ஞானிகள் வைரஸ்களில் உள்ளதை ஒத்த புரதத்தினை செலுத்தி பார்த்துள்ளனர்.இதன்போது பசுக்கள் பிறபொருள் எதிரிகளை உற்பத்தி செய்துள்ளன. இதன் அடிப்படையிலேயே HIV தொடர்பான ஆராய்ச்சிக்கு பசுக்களில் இருந்து Bnabs இனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
Related posts:
|
|