99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் சூரிய கிரகணம் !
Tuesday, July 25th, 201799 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கவுள்ள நிலையில் நாசா முக்கிய பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயராகும்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 21ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாகவும், அந்த சமயத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. மேலும் இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தை பார்க்க முடியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது .
Related posts:
நூறு மில்லியன் மடங்கு வேகத்தில் புதிய லேப்டாப்!
சாதனை படைத்த இளஞ்சிவப்பு வைரம்!
மனித முகம் கொண்ட மிருக குட்டி!
|
|