9000 ஆண்டுகள் முந்தைய கல் கண்டுபிடிப்பு!
Wednesday, November 23rd, 2016மனிதனின் பாரம்பரிய சமூகமயமாக்கல் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளை அறிய வேண்டும் என்றால் நாம் முதலில் கடல் பகுதிகளைத்தான் ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்கு காரணம் காலநிலை மாற்றங்களால் நிலப்பரப்பு குறைவடைந்து செல்வதுடன், கடற் பரப்பு அதிகரிப்பதாகும். இவ்வாறு கடற்பரப்பு அதிகரிக்கும்போது அதனுள் பல வரலாறுகளும் மூழ்கடிக்கப்படுகின்றன.
இப்படியாக மூழ்கடிக்கப்பட்ட வரலாறு ஒன்றினை துப்பு துலக்கும் வாய்ப்பு ஒன்று விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.அதாவது சுவீடன் நாட்டின் Hanö Bay கடலின் ஆழ் பகுதியில் 20 மீற்றர்கள் நீளமான கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக் கல் ஆனது சுமார் 9,000 வருடங்களுக்கு முன்னர் கடலின் அடிப் பகுதிக்கு சென்றிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த கல்லினை அடிப்படையாகக் கொண்டு புவியின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம், அக் காலத்தில் மனிதனின் வளர்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பாக சுவீடனின் Lund பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.
Related posts:
|
|