700 மில்லியனை தாண்டிய விண்டோஸ் 10 பாவனையாளர்கள் !

Wednesday, May 9th, 2018

இலவசமான கணினி இயங்குதளங்கள் காணப்படுகின்ற போதிலும் கட்டணம் செலுத்திப் பெறும் மைக்ரோசொப்ட்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு பாரிய வரவேற்பு உலகளவில் காணப்படுகின்றது.

மைக்ரோசொப்ட் நிறுவனமானது இறுதியாக 2015ம் ஆண்டில் தனது புத்தம் புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்திருந்தது.

தற்போதுவரை இவ் இயங்குதளமானது உலகெங்கிலும் சுமார் 700 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வருட இறுதிக்குள் இவ் எண்ணிக்கையை ஒரு பில்லியனாக அதிகரிப்பதை மைக்ரோசொப்ட் நிறுவனம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: