6,50,000 கார்களை திரும்ப பெறும் ஃபோர்டு நிறுவனம்!

Saturday, December 3rd, 2016

விபத்து நேரிடும்போது முறையாக செயல்படுவதை தடுக்கின்ற வகையில், முன் இருக்கைகளின் பெல்ட்களில் கோளாறு இருப்பதால், அமெரிக்காவின் ஃபோர்டு கார் நிறுவனம், ஏறக்குறைய 6 இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது.

இந்த தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக, விபத்து ஒன்றில் இருவர் காயமடந்திருப்பது குறித்த தகவல் வந்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் கூறியிருக்கிறது.இந்த பிரச்சனைக்குரிய கார்களில் பெரும்பாலானவை அமெரிக்காவிலும், கனடாவிலும், மெக்ஸிகோவிலும் விற்கப்பட்டுள்ளன.இந்த பிரச்சனையுடைய வாகனங்களில், பெல்டுகளை விரைப்பாக வைத்திருக்கும் தொழில்நுட்பம், சூடாவதால் வயர்களை துண்டிக்கும் ஆபத்து உள்ளது

_92809200_c0edd586-d7e1-4a23-92e6-5bc41816ac7f