400 ஆண்டுகளின் பின் பூமியை நெருங்கும் விண்கல்!

400 ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கு அருகில் பாரிய விண்கல் ஒன்று பயணிக்கவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி குறித்த விண்கல் பூமிக்கு அருகில் பயணிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. குறித்த விண்கல் சுமார் 2000 அடி அகலம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JO25 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லை எதிர்வரும் 19ஆம் திகதி இரவு காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியிலிருந்து 1.1 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 19ஆம் திகதி இரவு வாகனம் ஒளிமயமாக காட்சியளிக்கும் என நாசா தெரிவித்துள்ளதுடன் வால் நட்சத்திரத்தினால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓட்டுனர்கள் இல்லாமல் இயங்கும் ரயில் அறிமுகம்!
இலங்கையைக் கடக்கும் விண்வெளி மையம்!
வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு!
|
|