4.5 கி.மீ.நீளமான 10,000 அறைகள் விடுதியை அனுபவிக்காத ஹிட்லர்

Tuesday, April 26th, 2016

உலகையே நடுநடுங்க வைத்த சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர், ரொம்பவும் ஆசைப்பட்டு, 4.5 கி.மீ., தூரத்திற்கு 10,000 அறைகளைக் கொண்ட பிரம்மாண்ட ஓட்டல் ஒன்றை கட்டினார். ஆனால் இந்த ஓட்டலில் அவரும் தங்கியதில்லை. வேறு விருந்தினர்களும் தங்கியதில்லையாம்.

ஹிட்லர், ஜெர்மனியின் சாஸ்னிட்ஸ் மற்றும் பின்ஸ் பகுதிகளுக்கு இடையேயான 4.5 கி.மீ., தூரத்திற்கு 8 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட ஓட்டல் ஒன்றை கட்டினார். 1936ம் ஆண்டு துவங்கி 1939ம் ஆண்டு வரை இந்த ஓட்டலை கட்டும் பணி நடந்துள்ளது.

புரோர் விக்கி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டல் நாசிச ஆட்சியின் அடையாளமாக கட்டப்பட்டுள்ளது. உற்சாகத்தின் மூலம் பலத்தை பெருக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட இந்த ஓட்டலில் சினிமா தியேட்டர்கள், விழா அரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை உள்ளன.

கடல் பரப்பை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த ஓட்டலின் அறைகளில் மொத்தம் 20,000 படுக்கைகள் உள்ளது. சுமார் 70 ஆண்டுகள் திட்டமிடப்பட்டு, பின்னர் உருவாக்கப்பட்ட இந்த ஓட்டல் கட்டப்பட்ட பிறகு இதுவரை எந்த விழாவும் நடத்த அனுமதிக்கப்படவில்லை.

1939ம் ஆண்டு போர் முடிவுக்கு பிறகு இந்த ஓட்டல் கட்டடத்தை போர் ஆயுத கிடங்காகவும், ஆலையாகவும் மாற்ற ஹிட்லர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்த ஓட்டல் கட்டடம் கிழக்கு ஜெர்மன் ராணுவத்தின் ராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. தற்போது இந்த கட்டிடத்தின் சுவர்கள் சேதமடைந்த நிலையில் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

2004 முதல் 2011ம் ஆண்டு வரை இந்த கட்டிடத்தின் சில பகுதிகள் மட்டும் பிரிக்கப்பட்டு தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2011ல் ஒரு கட்டடம் மட்டும் 400 படுக்கைகளைக் கொண்ட இளைஞர்களுக்கான தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது.

தற்போது புரோரா ஓட்டலை 300 படுக்கைகள், டென்னிஸ் கோர்ட், நீச்சல் குளங்கள், ஷாப்பிங் மையங்கள் உள்ளிட்டவைகள் நிறைந்த மாடர்ன் விடுமுறை ரிசார்ட்டாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

ஆசை, ஆசையாய் பார்த்துப் பார்த்து ஓட்டலைக் கட்டிய ஹிட்லர் தான் பாவம், ஓட்டலை அனுபவிக்காமலேயே போய் சேர்ந்துவிட்டார்.

Related posts: