4 கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு!
Thursday, July 21st, 2016விண்வெளிக்கு நாசா அனுப்பிய ‛கெப்ளர்’ விண்கலம் தந்த தகவல்கள் மூலம் விண்வெளியில் 104 புதிய கிரகங்கள் உள்ளதெனவும், அதில் 4ல் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
புதிய கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ‛கெப்ளர்’ என்ற விண்கலனை கடந்த 2009-ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தியது. கெப்ளர் அனுப்பிய தகவல்களைக் கொண்டு சூரியக் குடும்பத்துக்கு வெளியே 104 புதிய கிரகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கே-2-72 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 4 கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகளுடன் இருப்பதாகவும், அதில் உயிரினங்கள் வாழ சாத்தியம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சந்திரனில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை!
உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை அப்பிள் நிறுவனம் வெளியிட்டது!
அப்பிள் பழங்களால் ஆபத்தா? அதிர்ச்சியூட்டும் தகவல்!
|
|