36 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பானில் வெடித்துச் சிதறிய அஸோ எரிமலை!

Sunday, October 9th, 2016

புவியியல் அமைப்பில் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் கடந்த 36 ஆண்டுகளாக மௌனம் காத்து வந்த பிரபல எரிமலையான ‘அஸோ’ நேற்று அதிகாலை வெடித்து சிதறியது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய ஜப்பானில் உள்ள ’ஓன்டேக்’ எரிமலை வெடித்துச் சிதறியதில் 63 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், இங்குள்ள குமாமோட்டோ பகுதியில் 5,222 அடி உயரமுள்ள சிகரத்துடன் ’அஸோ’ என்ற எரிமலை கடந்த 36 ஆண்டுகளாக மௌனம் காத்து வந்தது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.46 மணியளவில் இந்த எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது.பயங்கரமான தீப்பிழம்புகள் மலையில் அடிவாரத்தை நோக்கி உருண்டுவர இந்த எரிமலை கக்கிவரும் சாம்பல் வானில் சுமார் 11,000 மீட்டர் உயரத்தை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து சிதறும் என்பதால் பொதுமக்கள் யாவரும் மலையை நெருங்கிச் சென்றுப் பார்க்க முயற்சிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

s2.reutersmedia.net_

Related posts: