245 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட அற்புத கோப்பை!

59d6c8994ad28-IBCTAMIL Saturday, October 7th, 2017

சீனாவில் 1000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட கோப்பை ஒன்று ரூ.245 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் கிபி 960- 1127 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

இந்த கோப்பை தொடக்க விலையாக ரூ.66 கோடி நிர்ணயிக்கப்பட்டது.அதன் பின்னர் இது ரூ.245 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கியவர் யார் என்ற விவரத்தை வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது