2050இல் தென் கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளவுள்ள ஆபத்து!
Tuesday, September 5th, 2017
எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் கடல்மட்டம் 4.8 மீட்டரினால் உயரும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இது தவிர, மேற்கு அண்டார்டிகா பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேல்பகுதியிலும் பாரிய அளவில் பனிப்பாறைகள் உள்ளன
அவை தற்சமயம் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றது. இதன் காரணமாக 2050 ஆண்டில் கடல் மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும் என்று தெரியவந்துள்ளது அதேபோல கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரம் என மதிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை, தமிழகத்திலும் இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனதமிழக அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் பருவநிலை மாற்ற செயல்திட்டம் என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் கடல் மட்டம் உயர்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆய்வில் சர்வதேச ரீதியாக கடல்மட்டம் உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் இலங்கை தமிழகம் உட்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
|
|