2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அழகியாக பல்கலைக்கழக மாணவி சவ்வி ஷீல்ட்ஸ் தெரிவு!

Tuesday, September 13th, 2016

2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அழகியாக அர்கான்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி சவ்வி ஷீல்ட்ஸ் தெரிவாகியுள்ளார்.

பல கட்டங்களாக நடைபெற்று வந்து அமெரிக்க அழகிப் போட்டியில் 50 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா, பியூட்டோரிக்காவைச் சேர்ந்த 52 பேர் கலந்துகொண்டனர்.

இறுதிச் சுற்றுக்கு 7 பேர் தெரிவாகியிருந்ததுடன் அவர்களிடம் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொடுத்து அதற்குப் பதிலளிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன.ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப், ஹிலாரி ஆகியோரைப்பற்றிய கேள்விகளும் இடம்பெற்றன.

miss-america-savvy-shields

இதில் அர்கான்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி சவ்வி ஷீல்ட்ஸ் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.சவ்வி ஷீல்ட்ஸ் தனது ஜாஸ் நடனத்தாலும், புத்திசாலித்தனமான பதிலாலும் போட்டி நடுவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

‘சிறந்ததைச் சாப்பிடுங்கள், சிறப்பாக வாழுங்கள்’ என்ற கருப்பொருளில் பங்கேற்ற அவர் ஏற்கனவே மிஸ் அர்கான்சாஸ் பட்டத்தையும் வென்றிருந்தார். மிஸ் சவுத் கரோலினா பட்டம் வென்றிருந்த ராகேல் வியாத், அமெரிக்க அழகி போட்டியில் 2 ஆவது இடம் பெற்றார்.

arkansas-savvy-shields-crowned-2017-america-1024x794

Related posts: