2016 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனி டெல் வெலே தெரிவானார்!

Tuesday, December 20th, 2016

2016 ஆம் ஆண்டின் உலக அழகிக்கான மகுடம் இம்முறை புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபனி டெல் வெலேவுக்கு சூட்டப்பட்டுள்ளது.

‘Miss World 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் நடைபெற்றது. அதில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றதுடன் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமினிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர்.

அதில் 19 வயதான புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபனி டெல் வெலே உலக அழகிப் பட்டம் வென்றார்.
கல்லூரி மாணவியான இவர் ஸ்பெயின், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற ஸ்பெயின் அழகி மிரேயா லலாகுனா மகுடம் சூட்டினார்.

போட்டியில் டொமினிகன் ரிபப்ளிக் அழகி 2 ஆவது இடத்தையும் இந்தோனோசிய அழகி 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.

8133194-3x2-700x467

Related posts: